தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

'கைதி' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் அர்ஜூன் தாஸ். அதன் பிறகு விக்ரம், மாஸ்டர் படங்களில் நடித்தார். வசந்தபாலன் இயக்கிய அநீதி படத்தின் மூலம் ஹீரோ ஆனார். தற்போது 'ரசவாதி' என்ற படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். மவுனகுரு, மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமார் இந்த படத்தை இயக்குகிறார். இதில் தன்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடிக்கிறார். ரம்யா சுப்ரமணியம், ஜி.எம்.சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா, ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கிறார். சரவணன் இளவரசு, சிவகுமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். ரொமாண்டிக் கலந்த த்ரில்லர் படமாக தயாராகி வருகிறது.