'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. நடிகை, தாரிப்பாளர், சமூக சேவகர், என பன்முகத்திறன் கொண்ட லட்சுமி மஞ்சு, தனது புதிய படமான 'அக்னி நட்சத்திரம்' படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தில் அவர் முதன் முறையாக தனது தந்தை மோகன்பாபுவுடன் இணைந்து நடிக்கிறார். இதில் லட்சுமி மஞ்சு டெரர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது " பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கிய படங்களில் வரும் பெண் போலீஸ் அதிகாரிகள் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். அதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். அது அக்னி நட்சத்திரம் படம் மூலம் நனவாகி இருக்கிறது. எனது கேரக்டருக்கென்றே ஒரு பாடல் உருவாக்கி வெளியிடப்பட்டுள்ளது. அது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. போலீஸ் வேடத்தில் நடிப்பது பெருமையாக இருப்பதோடு, என் கடமையாகவும் நினைக்கிறேன்" என்கிறார் லட்சுமி மஞ்சு.