அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
டில்லியைச் சேர்ந்த தேவியானி ஷர்மா 'பானுமதி அண்ட் ராமகிருஷ்ணா' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, ஷைத்தான் மற்றும் சேவ் தி டைகர்ஸ் தொடர்களில் நடித்தார். தற்போது சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிக்கவும் பேச்சு நடந்து வருகிறது.
இதுகுறித்து அவர் கூறும்போது, "நான் தமிழ் சினிமாவை மிகவும் ரசித்து பார்ப்பேன். கலையும் கமர்ஷியலும் சரியான விகிதத்தில் இங்கு கலந்துள்ளது. எனக்கு தமிழ் சினிமாவில் எல்லோரையும் ரொம்பப் பிடிக்கும். இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தில் பணியாற்ற வேண்டும்'' என்றார்.
தேவியானி ஷர்மா ஒரு மேடை நாடக கலைஞர் மற்றும் பாரம்பரிய நடனத்தை கற்றுத் தேர்ந்தவர் மற்றும் ஓவியர். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் தேவியானி ஷர்மா, தானே ஓவியங்கள் வரைந்து அதனை ஆன்லைனில் விற்பனை செய்கிறார். இவரது ஓவியங்கள் பல லட்சங்களை தாண்டி விலை போகிறது என்கிறார்கள்.