‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் | சர்ச்சை பேச்சு: பகிரங்க மன்னிப்பு கேட்ட மிஷ்கின் | அஜித்துக்கு பத்ம பூஷன் விருது: திரையுலகினர் வாழ்த்து | 50 நாளை நிறைவு செய்த 'புஷ்பா 2' | அரசியலுக்கு வருகிறாரா திரிஷா? லேட்டஸ்ட் தகவல் | ராஜமவுலி படத்துக்காக சிங்கத்துடன் சண்டை போடும் மகேஷ் பாபு! | ஹிந்தி ஆடியன்சை குறி வைக்கும் நாகசைதன்யா- சாய் பல்லவியின் தண்டேல்! | ஆங்கிலத்திலும் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்-2 |
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் 2015 ல் வெளியாகி வரவேற்பை பெற்ற ஹாரர் திரில்லர் படம் ‛டிமான்ட்டி காலனி'. 8 ஆண்டுகளுக்குப் பிறகு 'டிமான்ட்டி காலனி 2' என்ற பெயரில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி உள்ளது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. டிமான்ட்டி காலனி படத்தின் சம்பவங்களுக்கு முன்பு நடந்த கதையும், அப்படத்தின் முடிவுக்கு பிறகு நடக்கும் சம்பவங்களும் சேர்த்து, இப்படத்தின் திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. அருள் நிதி உடன் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் முதல் பார்வையை மோஷன் போஸ்டர் உடன் ஹாரராக வெளியிட்டுள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் டீசர், இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.