புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் |
டப்பிங் ஆர்டிஸ்ட்டான ரவீணா ரவி, ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ராக்கி, வீரமே வாகை சூடும், லவ் டுடே, மாமன்னன் என பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். இதில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ரத்தினவேல் பாண்டியன் என்ற வில்லன் வேடத்தில் நடித்த பகத் பாசிலுக்கு மனைவியாக நடித்தார்.
இந்த நிலையில் தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‛‛மாமன்னன் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஜோதி எப்போதும் என் மனதுக்கு நெருக்கமாக இருப்பாள் நன்றி'' என பதிவிட்டுள்ளார் ரவீணா.
இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் ரத்தினவேல் பாண்டியன் தன்னுடைய மனைவியை எம்எல்ஏ-வாக ஆக்கி அழகு பார்த்தார். அவரது பேரவை சார்பாக நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம் என ரவீணாவின் இந்த பதிவுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே மாமன்னன் படத்தில் பகத் பாசில் நடித்த காட்சிகளை எடிட் செய்து அதன் பின்னணியில் ஜாதி பெருமைகளை கூறும் பாடல்களை இணைத்து பலரும் சோசியல் மீடியாவில் வைரலாக்கி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். நெட்டிசன்கள் தன்னை வைத்து ஜாதி பெருமை பேச தொடங்கி விட்டதால் அதிர்ச்சி அடைந்த பகத் பாசில், தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு இருந்த மாமன்னன் படத்தின் போஸ்டரை தற்போது நீக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.