கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
தமிழ் சினிமாவில் ஹீரோக்களே வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்து விட்டதால் வில்லன் வேடங்களில் நடிக்க பாலிவுட்டிலிருந்து நடிகர்களை வரவழைக்க வேண்டியது இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறார் இளம் வில்லன் நடிகர் சித்தார்த் ஷங்கர். ஐங்கரன், சைத்தான் படங்களில் நடித்த அவர் சமீபத்தில் வெளியான 'கொலை' படத்திலும் நடித்திருந்தார்.
சித்தார்த் ஷங்கர் கூறும்போது, "ரசிகர்களிடம் இருந்து நிபந்தனையற்ற அன்பும் ஆதரவுமே ஒவ்வொரு நடிகரும் எதிர்பார்க்கிறார்கள். அந்த அன்பை 'கொலை' படத்தில் என்னுடைய நடிப்பிற்காக கொடுத்ததற்கு நன்றி. எனது திறனை நிலைநிறுத்திக் கொள்ள இந்தப் படம் எனக்கு மகத்தான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் எனது நடிப்பை குறிப்பிட்டு பாராட்டிய விமர்சகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி. இத்தகைய பாராட்டும் ஆதரவுமே நான் அடுத்து தேர்ந்தெடுக்கும் படங்களில் இன்னும் சிறந்த நடிப்பைத் தரக்கூடிய பொறுப்பைக் கொடுத்துள்ளது” என்றார்.