லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கமல் நடிப்பில் ‛இந்தியன் 2' படத்தையும், ராம் சரண் நடிப்பில் ‛கேம் சேஞ்சர்' படத்தையும் இயக்கி வருகிறார் ஷங்கர். இரண்டு படங்களுமே இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த இரண்டு படங்களும் திரைக்கு வந்ததும், மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை தழுவி தனது அடுத்த படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது கேம் சேஞ்சர் படத்தை முடித்துவிட்டு மீண்டும் ராம் சரணை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தை முடித்த பிறகு தான் வேள்பாரி நாவலை தழுவி உருவாகும் படத்தை மூன்று பாகங்களாக பிரமாண்டமான பட்ஜெட்டில் இயக்குவதற்கு ஷங்கர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.