அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் என ஏற்கனவே தகவல் வெளியானது. சென்னை ஈ.சி.ஆரில் 500 வீடுகள் கொண்ட பிரமாண்டமான வட சென்னை அரங்கம் அமைத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படம் வெளிவந்த பிறகு தனுஷ் 50வது படங்களின் அப்டேட் வெளியாகும் என்கிறார்கள்.
இந்தநிலையில் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன், தனுஷ் 50வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அனிகா சுரேந்திரன் இப்போது தெலுங்கு, மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.