தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் 2005ம் ஆண்டில் வெளிவந்த படம் 'சந்திரமுகி'. 800 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்த படம். அப்படத்தின் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2', சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தயாராகி முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் முதல் பார்வையுடன் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துள்ளார்கள்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படம் வெளியாக உள்ளது. முதல் பார்வை போஸ்டரில் 'வேட்டையன்' தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் இருக்கும் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்கள். கங்கனா ரணவத், ராதிகா, வடிவேலு, சிருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன், மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களின் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.
முதல் பார்வை போஸ்டரைப் பகிர்ந்து ராகவா லாரன்ஸ், “தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நன்றி. 'வேட்டையன்' முதல் பார்வையை உங்களுக்காக வெளியிடுகிறோம், உங்களது ஆசீர்வாதம் தேவை,” எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.