காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் கேப்டன் மில்லர். சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்த படத்தின் டீசர் கடந்த ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியானது. டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் யு-டியூப்பில் 23.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தமிழ் சினிமாவில் அதிக பார்வையாளர்களை பெற்ற டீசராக மாறியுள்ளது. இதற்கு முன்பு விஜய்யின் மாஸ்டர் பட டீசர் தான் 20 மில்லியன் பார்வையாளர்கள் அதிக பார்வையாளர்களை கொண்ட டீசராக இருந்தது. இதனை கேப்டன் மில்லர் டீசர் மூலமாக தனுஷ் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.