டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா | மலையாளத்தில் அறிமுகமாகும் பிரீத்தி முகுந்தன் | ‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது | ஒத்த ரூவாய்க்கு ரூ.5 கோடி கேட்ட இளையராஜா : குட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் |
'காவாலா, காவாலா' என கிளாமர் காட்டி பாடி, ஆடி கடந்த மூன்று வாரங்களாக பலரையும் தள்ளாட வைத்துள்ளார் தமன்னா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கடந்த பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ஆனால், சில வருடங்களாக அவர் நடித்து வெளிவந்த படங்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என டபுள் ட்ரீட் தர உள்ளார் தமன்னா. ஆகஸ்ட் 10ம் தேதி ரஜினிகாந்துடன் அவர் நடித்துள்ள 'ஜெயிலர்' படமும், ஆகஸ்ட் 11ம் தேதி சிரஞ்சீவியுடன் நடித்துள்ள 'போலா சங்கர்' தெலுங்குப் படமும் வெளியாக உள்ளது. இரண்டு மொழிகளிலும் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரது படங்களில் நடித்து இரண்டுமே அடுத்தடுத்த நாட்களில் வெளிவருகிறது என்பது தமன்னாவுக்கே டபுள் ட்ரீட் தான்.
ஒரு பக்கம் வெப் தொடர்கள், மறுபக்கம் காதல் விவகாரம் என கடந்த சில மாதங்களாகவே பரபரப்பில் இருக்கும் தமன்னாவுக்கு அடுத்த மாதம் தங்கமான மாதமாக அமையப் போகிறது.