ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரித்துள்ள படம் யோக்கியன். இதில் ஜெய்ஆகாஷ் தந்தை, மகன் என் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஹீரோயின்களாக கவிதா, ஆர்த்தி சுரேஷ், குஷி நடித்துள்ளனர். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜூபின் இசை அமைத்திருக்கிறார். சாய் பிரபா மீனா இயக்குகிறார். இந்த படம் முதன் முறையாக ஒரே நேரத்தில் நாளை (28ம் தேதி) தியேட்டர் மற்றும் 'ஏ கியூப் மூவிஸ் ஆப்' என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதுகுறித்து ஜெய் ஆகாஷ் கூறியதாவது: ஒரே நேரத்தில் தியேட்டரிலும், ஒடிடியிலும் 'யோக்கியன்' படம் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. என்னுடைய உதவி இயக்குனர் சாய் பிரபா மீனா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறேன். இதற்காக நான் மட்டுமல்ல பட குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள்.
கெட்ட போலீஸ் அதிகாரியின் மகன் எப்படியிருக்கிறான் என்பதை மையமாக கொண்டு இக்கதை உருவாகியுள்ளது. அத்துடன் நல்ல பாடல், இசை, காட்சிகள் என கமர்ஷியல் அம்சங்களுடன் படம் வந்திருக்கிறது. நல்லவன் கெட்டவன் ரோல்களில் ஹீரோக்கள் நடிக்கின்றனர். அப்படியொரு முயற்சியாகவே நான் இதில் நடித்திருக்கிறேன். ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடிப்பேன் என்பதை இதில் காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.