ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

தமிழ் சினிமா உலகில் தமிழில் படத் தலைப்பு வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டபின் அந்த 'வரி விலக்கு' அளிப்பதை தமிழக அரசு விலக்கிக் கொண்டது. சமீபத்தில் தமிழக முதல்வரை சந்தித்துப் பேசிய திரையுலகினர் தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.
இந்நிலையில் நாளை ஜுலை 28ல் வெளியாக உள்ள படங்களின் தலைப்புகளில் ஆங்கில ஆக்கிரமிப்புதான் அதிகம் இருக்கிறது. “டிடி ரிட்டர்ன்ஸ், எல்ஜிஎம், லவ், டெரர், டைனோசர்ஸ், பீட்சா 3” ஆகிய ஆங்கிலப் பெயர் கொண்ட படங்கள் வெளியாகின்றன.
தமிழ் சினிமாவில் தமிழ்க் கலைஞர்கள் மட்டுமே பங்கு பெற வேண்டும் என பெப்ஸி சங்கத்தினர் கடந்த வாரம் அறிவித்திருந்தனர். அப்படியே, தமிழ்ப் படங்களுக்கு தமிழில் மட்டுமே பெயர்களை வைக்க வேண்டும் என்றும் அறிவித்திருக்கலாம். படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் அவர்களது பெயர்களை தமிழில்தான் வைக்க வேண்டும் என்று கூட சொல்லியிருக்கலாம்.
தமிழ், தமிழ் எனப் பேசும் பலரும் அவர்களது நிறுவனங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மட்டுமே வைத்திருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.




