நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' | உங்க பட ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா லாலேட்டா ? ; ரிலீஸ் தேதியை அறிவிக்க நடிகரின் புதிய யுக்தி | 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி |
ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி 'யாத்ரா' என்ற படம் தெலுங்கில் 2019ம் ஆண்டு வெளியானது. மஹி வி ராகவ் இயக்கிய படத்தில் ஒய்.எஸ்.ஆர் கேரக்டரில் மம்மூட்டி நடித்திருந்தார். இந்த படம் கட்சிகாரர்களிடம் வரவேற்பை பெற்றாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தற்போது 'யாத்ரா 2' என்ற பெயரில் இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய மஹி வி.ராகவ் இதையும் இயக்குகிறார்.
முதல்பாக கதையில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி சிறுவனாக இருந்தார். இந்த பாகத்தில் அவர் கல்லூரி மாணவன் மற்றும் அரசியலுக்குள் நுழையும் தருவாயில் உள்ளவராக வருகிறார். அவரது கேரக்டரில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. பின்னர் ஏனோ அந்த திட்டம் கைவிடப்பட்டு தற்போது ஜீவா நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக ஐதராபத்தில் போட்டோ ஷூட் நடத்தப்பட்டு அது திருப்திகரமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. விரைவில் ஜெகன்மோகன் ரெட்டி தோற்றத்தில் ஜீவா இருக்கும் படத்துடன் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.