பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
எளிமைக்கும் நேர்மைக்கும் உதாரணமாக திகழ்ந்த கக்கனின் வாழ்க்கை இப்போது திரைப்படமாகியுள்ளது. இதில் கக்கனாக நடித்திருக்கும் ஜோசப் பேபி, படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியதுடன் தயாரித்தும் இருக்கிறார். பிரபு மாணிக்கம் இயக்கி உள்ளார். தேவா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. கக்கன் பிறந்த ஊரான தும்பைப்பட்டி என்ற ஊரிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று(ஜூலை 25) காலை சென்னையில் நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, அமைச்சர் துரை முருகன் உள்ளிட்டோருடன் கக்கன் படக்குழுவினரும் பங்கேற்றனர்.