ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
தமிழ், தெலுங்கில் இயக்குனராக, நடிகராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி. தெலுங்கில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் நடித்துள்ள 'ப்ரோ' படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இந்த வாரம் ஜுலை 28ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்காக பேட்டிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி.
பேட்டி ஒன்றில் அவர் அடுத்து இயக்க உள்ள படங்கள் பற்றிய தகவலைச் சொல்லியுள்ளார். விரைவில் தமிழில் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். அடுத்து துல்கர் சல்மான் நடிக்க, ராணா டகுபட்டி தயாரிக்கப் போகும் பான் இந்தியா படம் ஒன்றையும் இயக்க உள்ளாராம். இது பற்றிய அறிவிப்புகள் அடுத்து வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
ராணா டகுபட்டி குடும்பத்தினர் பல ஆண்டு காலமாக திரைப்படத் தயாரிப்பில் உள்ளனர். அவரது தாத்தா ராமா நாயுடு ஆரம்பித்த சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழில் “வசந்த மாளிகை, தனிக்காட்டு ராஜா, மைக்கேல் ராஜ்'' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளனர். கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'ப்ரின்ஸ்' படத்தை இணைந்து தயாரித்தனர். ராணா டகுபட்டி சில பிரம்மாண்டப் படங்களைத் தயாரிக்க உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன.