லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இந்த படத்தில் அவருடன் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்து தான் இயக்கும் 50வது படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் இறங்கி உள்ளார். இந்த படத்தில் தனுசுடன் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கிறார்கள். இப்படம் வடசென்னை கதைக்களத்தில் உருவாகிறது.
இந்த நிலையில் வருகிற ஜூலை 28ம் தேதி தனுஷின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் மற்றும் அடுத்து இயக்கி நடிக்கவிருக்கும் அவரது ஐம்பதாவது படத்தின் டைட்டில் போஸ்டர் இரண்டும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டு தனது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுக்கப் போகிறார் தனுஷ்.