அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக உருவாகியுள்ள படம் லியோ. கடந்த ஜனவரியில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. அக்டோபர் 19ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டது. ரிலீசுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருந்தாலும் கூட இந்த படத்தின் வியாபாரம் கடந்த சில நாட்களாகவே சூடு பிடித்துள்ளது. இந்த படத்தின் கேரள, கர்நாடக வெளியீட்டு உரிமைகள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டன.
கேரளாவில் கோகுலம் பிலிம்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்த நிலையில் தெலுங்கில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் கைப்பற்றியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளன. இன்னும் தமிழக வெளியீட்டு உரிமை மட்டுமே மீதம் இருக்கிறது. இந்த படத்தை படத்தின் தயாரிப்பாளரே நேரடியாக வெளியிடுவாரா அல்லது ரெட் ஜெயண்ட் மூவிஸ், சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் வெளியிடுமா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.