ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
நடிகை அமலாபாலுக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் எதுவும் பெரிதாக இல்லை. என்றாலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்தார். அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிட்டு பெரிய எண்ணிக்கையிலான பாலோயர்ஸ்களை வைத்திருந்தார்.
கடந்த ஆண்டு தனது ராஜஸ்தானிய காதலருடன் புதுச்சேரி ஆரோவில் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, நில மோசடி உள்ளிட்டவை நீதிமன்றம் வரை சென்றது. இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் இருந்து அமலாபால் ஒதுங்கி இருந்தார்.
தற்போது சிறு இடைவெளிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் தனது படங்களை வெளியிட்டு “மீண்டும் ஸ்பாட்லைட்டுக்கு வந்து விட்டேன்” என்று குறிப்பிட்டிருகிறார். அவரது இந்த பதிவுக்கு ஒரே நாளில் ஒன்றரை லட்சத்திற்கு அதிகமான லைக்ஸ் குவிந்து உள்ளது. மேலும், 'தலைவி ரிட்டர்ன்ஸ், 'குயின் இஸ் பேக்' போன்ற கமெண்ட்களை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது பிருத்விராஜுடன் நடித்துள்ள 'ஆடு ஜீவிதம்' படம் மட்டுமே அமலாபாலின் ஒரே நம்பிகையாக உள்ளது. இந்த படத்திற்கும், பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படம் தனது அடுத்த ரவுண்டை துவக்கி வைக்கும் என்ற நம்பிகையில் இருக்கிறார். இதற்காகவே அவர் மீண்டும் தனது இன்ஸ்டாகிராமுக்கு வந்திருக்கிறார்.