பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
நடிகை வனிதா விஜயகுமாரின் திருமணங்கள் அனைத்தும் சர்ச்சையிலும், பிரிவிலும் முடிந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கம்பேக் கொடுத்துள்ளார். அதைத்தவிர மாடலிங், பொட்டிக், காஸ்மட்டிக் கடை என பிசினஸிலும் தற்போது கலக்கி வருகிறார். சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள வனிதாவுக்கு வரிசையாக படங்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் திடீரென தான் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறினார். இதைபார்க்கும் ரசிகர்கள் பலரும் வனிதாவுக்கு மீண்டும் திருமணமா? என்று அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், அவர் உண்மையில் எந்தவொரு நபரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தான் நேசிக்கும் சினிமாவை தான் மீண்டும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும், இனி தன்னுடைய கவனம் முழுவதும் சினிமாவில் மட்டுமே இருக்குமென்பதால் இனி விவாகரத்துக்கு வாய்ப்பேயில்லை என்று கூறியுள்ளார்.