'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
'முதலும் நீ முடிவும் நீ' படத்தின் மூலம் அறிமுகமான கிஷன் தாஸ் நடித்துள்ள படம் 'சின்க்'. இதில் மோனிகா, நவீன் ஜார்ஜ் தாமஸ், சவுந்தர்யா பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விகாஷ் ஆனந்த் சித்தார்த் இயக்கி உள்ளார். ஷிவ்ராம் ஒளிப்பதிவு செய்துள்ளார், அபிஜித் ராமசாமி இசை அமைத்துள்ளார். இந்த படம் ரோட் டிராவல் ஜார்னரில் ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. வருகிற 21ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
இதுகுறித்து இயக்குனர் விகாஷ் ஆனந்த் சித்தார்த் கூறும்போது, “நண்பர்கள் சேர்ந்து எடுத்த படம் இது என்பதால் பட்ஜெட்டில் நிறைய விஷயங்கள் காம்ப்ரமைஸ் செய்தோம். நாங்கள் திட்டமிட்ட நேரம் தாண்டி படப்பிடிப்பு போனால் கூட நாங்கள் எங்களுக்குள் பேசி குறைந்த நாட்களிலேயே படத்தை முடித்து விட்டோம். எங்களது திறமைக்கு ஆதரவு கொடுத்துள்ள ஆஹாவுக்கு எங்களது நன்றி” என்றார்.