நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமா உலகில் இதற்கு முன்பு இப்படி ஒரு இடைவெளியில் ஒரு படத்தின் பாடல் வெளியாகி இருக்காது. அப்படி ஒரு இடைவெளியுடன் 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டாவது பாடல் ஜுலை 19ம் தேதி வெளியாக உள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படம் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் முதல் சிங்கிளான 'ஒரு மனம்' பாடல் கடந்த 2020ம் வருடம் அக்டோபர் மாதம் 7ம் தேதி வெளியானது. சுமார் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது பாடல் வெளியாகப் போகிறது. அதன் அறிவிப்புப் போஸ்டரில் 'ஹிஸ் நேம் இஸ் ஜான்' என்று மட்டும் இடம் பெற்றுள்ளது. படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. விரைவில் வெளியீட்டுத் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.