7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் |
மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த். இவர் முன்னாள் பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தமிழில் சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி போன்ற முன்னணி கதாநாயகர்கள் படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்.
இவருக்கு சினேகா மற்றும் சாதனா என இரண்டு மகள்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இவர் மகள் சாதனாவிற்கு திருமணம் நடைபெற்றது. விஷ்ணுராஜ் என்பவரை சாதனா திருமணம் செய்து உள்ளார். இருவருமே ஆர்க்கிடெக் படித்துள்ளனர்.
சென்னையில் நடந்த இந்த திருமண விழாவில் ஷங்கர் தவிர வேறு எந்த பெரிய இயக்குனர்களும் கலந்து கொள்ளவில்லை. ஓரிரு தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்த சில ஹிரோக்கள் கலந்து கொள்ளாத நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது பிஸியான நேரத்திலும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். அதேப்போல் நடிகர் ஜீவாவும் பங்கேற்றார்.