‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் |

பெண்களுக்கான விவாத நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் ஓடிடி தளம் ஒன்று நடத்தியது. இதில் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி அவர்களின் அனுபவங்கள், சவால்கள் மற்றும் வெற்றிகளைப் பற்றி விவாதித்தனர். நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், மாளவிகா மோகனன், மதுபாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாளவிகா மோகனன் பேசியதாவது : நடிகைகள் தங்கள் திரைப்பயணத்தை ஆரம்பிக்கும் போது, நட்சத்திர நடிகர்களுடன் நடித்தால் மட்டுமே நமக்கான வரவேற்பு கிடைக்கிறது. இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நடிகைக்கும் அதுதான் கற்பிக்கப்பட்டுள்ளது. அப்படி பெரிய நடிகர்களுடன் நடிக்கும்போது 'பெரியவர்களுடன்' வேலை செய்கிறோம் என்றே எனது உள்ளுணர்வு சொன்னது. பெரிய நடிகருடன் பணியாற்றி ஒரே இரவில் வெற்றியைப் பெறும்போது, சில சமயங்களில் நமது மதிப்பை அவர்களுடன் ஒப்பிட்டு கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இதை நான் உணர்ந்திருக்கிறேன்.
இந்த உணர்தல் எனக்கு என் அம்மா குறிப்பிடும் ஒன்றை நினைவுபடுத்தியது. அவர் 1960கள் மற்றும் 1970களில் மலையாளப் படங்களை அடிக்கடி பார்ப்பார், அந்த சமயத்தில் நடிகைகளுக்கு குறிப்பிடத்தக்க பாத்திரங்கள் வழங்கப்பட்டன. அந்த சமயங்களில் அவர் தனது பாராட்டை வெளிப்படுத்துவார். நல்ல பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்யச் சொல்வார். இதனை அப்போது முழுமையாகப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டேன், அவர் ஏன் இத்தகைய உணர்வுகளைக் கொண்டிருந்தார் என்று கேள்வி எழுப்பினேன். இப்போது அதுகுறித்து தெளிவு பெற்றிருக்கிறேன்.
இருப்பினும், இப்போது எனது பயணத்தில் ஒரு முழு ரவுண்டை முடித்துவிட்டதால், நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் பக்குவம் வந்துவிட்டதாக கருதுகிறேன். என்றார்.




