பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

‛நான் சிரித்தால், தமிழ்படம் 2' ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் இவர் நடித்த ‛ஸ்பை' படம் வெளியானது. அடுத்த ஜாக்பாட்டாக பவன் கல்யாண் பட வாய்ப்பு இவரை தேடி வந்துள்ளது.
சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ஓ.ஜி . பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஜஸ்வர்யா மேனன் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்பை படத்தில் இவரது நடிப்பு ஓரளவுக்கு பேசப்பட்டதால் தற்போது பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.




