'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சின்னசாமி சினி புரொடக்ஷன் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரித்துள்ள படம் 'ராயர் பரம்பரை'. அறிமுக இயக்குனர் ராம்நாத் இயக்கி உள்ளார். கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, கஸ்தூரி, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்தில் நடித்துள்ள கிருத்திகா மாடலிங் துறையில் முன்னணியில் இருக்கிறவர் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். படத்தின் அறிமுக விழாவில் பேசிய அவர் “இது எனக்கு முதல் படம். படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது, படம் நன்றாக வந்துள்ளது கண்டிப்பாகப் படம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
கிருஷ்ணா பேசும்போது “கொரோனா முடிந்தவுடனே நான் ஒப்பந்தமான படம் இது தான். புல் ஹீயூமர் படம், நான் இதற்கு முன்பு இந்த மாதிரி பண்ணியதில்லை. இயக்குநரை நம்பி தான் களம் இறங்கினேன். எல்லா ஜவுளிக்கடை போட்டோவிலும் நாயகி படம் தான் இருக்கும், நல்ல மாடல் நன்றாக நடித்துள்ளார்” என்றார்.