கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! |

அறம் புரொடக்ஷன் சார்பில் ராமலிங்கம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக 'P 2' என்று டைட்டில் வைத்துள்ளனர். கன்னடம், தெலுங்கு உட்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள மனோஜ் இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.
சமீபத்தில் வெளியாகி பரவலான பாராட்டுகளை பெற்ற 'யாத்திசை' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த சித்து குமரேசன் இந்த படத்தின் மூலம் ஹீரோயின் ஆகிறார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா மற்றும் மஸ்காரா அஸ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பின் தேவா இசையாமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.
சிவம் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது “ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறோம். நம்பிக்கை துரோகத்தை மையப்படுத்தி திரைக்கதையை அமைத்திருக்கிறோம். படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற உள்ளது” என்றார்.