ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் ருக்மணி வசந்த் : ரகசியம் உடைத்த மதராஸி தயாரிப்பாளர் | மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் நாயகியாக நடித்திருந்த அனுஷ்கா, அதன்பிறகு 2020ம் ஆண்டில் சைலன்ஸ் என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமையல் கலை வல்லுனராக அனுஷ்கா நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று இந்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படம் வருகிற ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். அதோடு தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படத்தை கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.