மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் |
தமிழ் சினிமாவிலிருந்து அரசியலுக்குள் நுழையப் போகும் அடுத்த நடிகர் விஜய் என கடந்த மாதத்திலிருந்து சினிமா உலகிலும், அரசியல் உலகிலும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்வி உதவி வழங்கும் விழாவை விஜய் நடத்தியதே அரசியலுக்கான முதல் படிக்கட்டுதான் என விமர்சனங்கள் எழுந்தன. பொதுவாக மாவட்ட வாரியாகத்தான் முதலிடம் பிடிப்பவர்களைப் பாராட்டுவார்கள். ஆனால், விஜய் சட்டசபைத் தொகுதி வாரியாக அழைத்து கவுரவித்ததுதான் அந்த அரசியல் கேள்வியை எழுப்பியது.
இந்நிலையில் விஜய் அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள 2026ம் ஆண்டு வரையில் புதிய படங்களில் நடிக்கப் போவதில்லை என்று செய்திகள் காலையில் இருந்து பரவிக் கொண்டிருக்கிறது. தற்போது அவர் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது. அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அவருடைய 68வது படத்தில் ஓரிரு மாத இடைவெளியில் நடிக்கப் போகிறார் என்றும் இன்று வெளியான தகவல். இந்த 68வது படத்தை முடித்த பிறகு விஜய் வேறு எந்தப் படத்திலும் நடிக்க மாட்டார். அவரிடம் பேசிய சில தயாரிப்பாளர்களிடம் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார் என்று செய்திகள் பரவி வருகின்றன.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. விஜய் ஒரு படத்தில் நடித்து முடிக்கும் சமயம்தான் அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும். ஆனால், 'லியோ' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருடைய 68வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இவ்வளவு அவசரமாக விஜய் அறிவித்ததன் காரணம் அரசியல் நுழைவுதான் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.
இப்படி ஒரு செய்தி வெளியான பிறகு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதற்கான ஆதரவுக் கருத்தையும், எதிர்ப்புக் கருத்தையும் பகிர்ந்து வருகிறார்கள். இப்படி ஒரு தகவல் பரவுவதற்கு விஜய் தரப்பிலிருந்து ஏதாவது பதில் வருமா என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.