தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்திருந்த திரிஷா, அதையடுத்து விஜய்யுடன் லியோவை தொடர்ந்து ‛தி ரோடு' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வந்தார். ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் திரிஷாவுடன் டான்சிங் ரோஸ் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், பிரசன்னா, லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் இந்த படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்க உள்ள புரமோஷன் நிகழ்ச்சிகளில் திரிஷாவும் கலந்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த படம் மதுரையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ள இயக்குனர் அருண் வசீகரன், விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதாகவும் கூறுகிறார்.