எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
2023ம் ஆண்டின் அரையாண்டு நேற்றுடன் முடிந்து போனது. கடந்த அரையாண்டில் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. அவற்றில் பத்து படங்கள் வரையில்தான் வெற்றிப் படங்கள் என பேசப்பட்டது. கடந்த சில வருடங்களாக இருப்பதைப் போலவே வெற்றி சதவீதம் என்பது 10 என்ற அளவில் தான் உள்ளது.
அடுத்த அரையாண்டில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்', செப்டம்பர் மாதத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2', அக்டோபர் மாதத்தில் விஜய் நடிக்கும் 'லியோ', நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு 'அயலான், ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ள படங்கள் இருக்கின்றன.
ஜூலை மாதத்தில் சில படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக இருக்கின்றன. ஜூலை 14ல் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்', ஜூலை 21ல் விஜய் ஆண்டனி நடிக்கும் 'கொலை', ஜூலை 28ல் விஷால், எஸ்ஜே சூர்யா நடிக்கும் 'மார்க் ஆண்டனி' ஆகியவை முக்கியமான படங்களாக இருக்கும். இவை தவிர மேலும் பல சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன. இந்த ஆண்டின் அடுத்த ஆறு மாதங்களுக்கான வெற்றியை ஜூலை மாதம் எந்தப் படம் பெரிய அளவில் ஆரம்பித்து வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தில் எழுந்துள்ளது.