பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா. இவர் அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். இவரும் பட்டத்து யானை, சொல்லி விடவா போன்ற படங்களில் நடித்த நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் உமாபதியும் ஒருவர். அதன் பிறகுதான் அர்ஜுன் குடும்பத்திற்கும் தம்பி ராமையா குடும்பத்துக்கும் இடையே நட்பு ஏற்பட்டபோது, உமா பதியும், ஐஸ்வர்யாவும் காதலிக்க தொடங்கி இருக்கிறார்கள். கடந்த இரு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் வரும் தை மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தம்பி ராமையா தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அர்ஜூன் மற்றும் தம்பி ராமையா தரப்பில் அறிவிக்கப்படுகிறது.