புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
சிவாஜிகணேசன், கமல்ஹாசன், கவுதமி, ரேவதி, நாசர், வடிவேலு நடித்து வெளிவந்த “தேவர் மகன்” படம் குறித்த தனது கருத்தை 'மாமன்னன்' பட இசை வெளியீட்டின் போது பேசியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். அப்போது அவர் பேசியது குறித்து தற்போது கமல்ஹாசன் ரசிகர்கள் திடீரென மாரி செல்வராஜை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
மற்றுமொரு பேச்சின் போது அவர் கமல்ஹாசன், கவுதமி நடித்து வெளிவந்த 'பாபநாசம்' படம் பற்றியும் பேசியிருந்தார். கமல்ஹாசனின் இரண்டு படங்கள் பற்றி மாரி செல்வராஜ் விமர்சித்துப் பேசியதைக் குறித்து பல கமல்ஹாசன் ரசிகர்கள் இன்று சமூக வலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள். இரண்டு படங்களைப் பற்றிய புரிதலும் அவருக்கில்லை என்றும், மாரி செல்வராஜ் கூட அவரது படங்களில் குறிப்பிட்ட சாதியைப் பற்றித்தான் மையப்படுத்தி படமெடுக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
'தேவர் மகன்' படத்தில் வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரமான 'இசக்கி' கதாபாத்திரம்தான் 'மாமன்னன்' படம் உருவாகக் காரணம் என்றும் மாரி செல்வராஜ் பேசியிருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ள 'மாமன்னன்' படம் அடுத்த வாரம் ஜுன் 29ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளிவந்த பின் அப்படத்தைப் பற்றி கமல்ஹாசன் கடுமையாக விமர்சிக்க வாய்ப்புள்ளது.