அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான படம் 'போர் தொழில்'. ஒரு பரபரப்பான த்ரில்லர் படம் என விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டைப் பெற்ற படம். பல சினிமா பிரபலங்களும் படம் வெளிவந்த போது பாராட்டினார்கள்.
ஆனால், படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்த சரத்குமார் மனைவி ராதிகா இரண்டு வாரங்களுக்குப் பிறகு படத்தைப் பாராட்டி டுவீட் செய்துள்ளார். “நல்ல சினிமா… பத்திரிகையாளர்களின் சிறந்த பாராட்டுக்கள் மற்றும் வாய் வழியாக இந்தப் படம் மேஜிக் பெற்றது. சினிமாவில் ஒவ்வொரு நாளும் ஒன்றைக் கற்கிறோம், இது வழக்கத்திற்கு மாறானது, மேலும் நட்சத்திரங்களுக்கு புதிய பாதையைக் காட்டியுள்ளது. கன்டென்ட் தான் கிங் என்பதை 'போர் தொழில்' நிரூபித்துள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராதிகாவாவது இரண்டு வாரங்களுக்குள் பாராட்டிவிட்டார். சில சினிமா பிரபலங்கள் நல்ல படம் என்று பெயரெடுத்த படங்களைக் கூட ஓடிடியில் வெளியான பிறகு பார்த்துவிட்டு பாராட்டும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.