சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

10ம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் விதத்தில் கல்வி விருது வழங்கும் விழாவை நடிகர் விஜய் நேற்று நடத்தினார். அப்போது பேசிய விஜய், 'அசுரன்' படத்தில் தனுஷ் பேசிய வசனம் ஒன்றைக் குறிப்பிட்டுப் பேசினார். ஆனால், அது 'அசுரன்' படம் என்றோ, வெற்றிமாறன் இயக்கிய படம் என்றோ, தனுஷ் படம் என்றோ குறிப்பிடாமல் பேசினார்.
“இந்த மாதிரி விழாவை நடத்தறதுக்கு ரொம்ப ரொம்ப முக்கிய காரணம், சமீபத்துல ஒரு படத்துல அழகான டயலாக் ஒண்ணு நான் பார்த்தேன், கேட்டேன்” என்று சொல்லிவிட்டு, அந்த வசனத்தைப் பேசிக் காட்டினார். “காடு இருந்தால் எடுத்துக்குனுவாங்க, ரூபா இருந்தா புடுங்கிக்குவானுங்க, ஆனா, படிப்பை மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது,” ங்கறது பாதிச்ச ஒரு வரிகளா இருந்தது, இது நூத்துக்கு நூறு உண்மை மட்டுமில்ல, இதுதான் யதார்த்தமும் கூட,” என்றார் விஜய். அந்த வசனத்தை அவர் பேசியது போது விழாவுக்கு வந்தவர்கள் கூட ஆரவாரம் செய்தனர்.
'அசுரன்' பட வெற்றியை விஜய் பேசியது தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தது என்றாலும், மற்றொரு பக்கம் அந்த வசனத்தைப் பேசியது தனுஷ் என்று சொல்லாமல் விட்டது வருத்தத்தைக் கொடுத்துள்ளது. விஜய் 'அசுரன்' வசனத்தை சுட்டிக் காட்டி பேசியது பற்றி இயக்குனர் வெற்றிமாறன் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, “சினிமாவில் நாம் பேசுகிற வசனம், சமூகத்தில் மிகப் பிரபலமான ஒருவர் மூலமாக சென்றடையும் போது அது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகத்தான் பார்க்கிறேன்,” என்று சொல்லியிருக்கிறார்.
இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அவர் சார்ந்த துறையில் மற்றொரு நடிகர் படத்தைப் பற்றி எந்தப் பெயரையும் குறிப்பிடாமல் பேசியது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 'அசுரன்' என்று குறிப்பிட்டிருந்தால் அவரது பேச்சிற்கான நேர்மை இன்னும் அதிகமாக வெளிப்பட்டிருக்கும் என்று தனுஷ் ரசிகர்களும் தெரிவிக்கிறார்கள்.