விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்டது. வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் தேதி என முன்கூட்டியே அறிவித்து விட்டதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை தடங்கல் இல்லாமல் நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் தவிர இன்னும் பல குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர்களும் நினைந்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் லேட்டஸ்டாக இந்த படத்தில் இணைந்துள்ளார் நகைச்சுவை நடிகர் வையாபுரி.
இதற்கு முன்னதாக வையாபுரி சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் ரசிகர்களிடம் அதிகம் ரீச் ஆனார். அதைத் தொடர்ந்து விஜய்யுடன் பிரியமானவளே, திருப்பாச்சி, சச்சின், போக்கிரி, வில்லு, காவலன் என பல படங்களில் இணைந்து நடித்துள்ளார், அந்தவகையில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் லியோ படத்தில் விஜய்யுடன் வையாபுரி மீண்டும் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.