ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
சின்னத்திரையில் ஒருகாலத்தில் மோஸ்ட் பேவரைட் ஜோடி என்றால் அது சரவணன் மீனாட்சியாக நடித்த மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும் தான். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அண்மையில் அவர்கள் வாழ்வில் மகிழ்வூட்டும் விதமாக குழந்தை செல்வமும் கிடைத்தது. இந்நிலையில், சீரியல் நடிகர்கள், நடிகைகளுக்கு இடையே தொடர்ச்சியாக பிரச்னையாக ஏற்பட்டு வருவது குறித்து மனம் திறந்துள்ள மிர்ச்சி செந்தில், சீரியல் நடிகைகளை திருமணம் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மிர்ச்சி செந்தில் கூறியதிலிருந்து, 'பொதுவாக சீரியலில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரம் போலத்தான் நிஜ கேரக்டரும் இருக்குமென நடிப்பவர்களும் நினைத்து விடுகிறார்கள். ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவர்கள் சுயரூபம் தெரியவர பிரச்னை ஆரம்பமாகிறது. இதனால் தான் சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் டைவர்ஸ் செய்துவிடுகிறார்கள்.
நானும் கூட அப்படித்தான் ஸ்ரீஜாவை சீரியலில் வரும் மீனாட்சியாக பார்த்துவிட்டேன். பின்பு தான் புரிந்தது நான் மீனாட்சியை கல்யாணம் பண்ணல ஸ்ரீஜாவை கல்யாணம் பண்ணியிருக்கிறேன் என்று. சீரியல் ஸ்ரீஜா வேறு, நிஜ ஸ்ரீஜா வேறு. திருமணத்துக்கு பிறகு வேறுவிதமாக வாழ்க்கை அமைந்தாலும் காதலின் மகத்துவம் புரிந்தவர்களுக்கு சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்' என்று அட்வைஸ் செய்வது போல் கூறியுள்ளார்.