ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டில் மோகன்லால், மீனா நடித்து வெளிவந்த திரைப்படம் 'த்ரிஷ்யம்'. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டில் 'த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம்' நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படமும் தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. சமீபத்தில் த்ரிஷ்யம் படத்தை ஆங்கிலம், கொரியா உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகி வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் 'த்ரிஷ்யம்' படத்தின் மூன்றாம் பாகத்துக்கான திரைக்கதை பணிகளில் ஜித்து ஜோசப் ஈடுபட்டு வருகிறார். இதுதான் த்ரிஷ்யம் படத்தின் இறுதி பாகம் என்கிறார்கள். ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுக்கும் விதமாக இந்த படத்தை மலையாளத்தில் மோகன்லால் நடிக்க ,ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிக்க இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு துவங்கி ஒரே தேதியில் படத்தை வெளியிடவும் படக்குழுவினர்கள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.