இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' | பிளாஷ்பேக்: பெண் உளவாளியாக நடித்த முதல் நடிகை | 72 கோடி சொத்தை சஞ்சய் தத்துக்கு உயில் எழுதி வைத்த 62 வயது ரசிகை | மீண்டும் ஒரு நாய் படம் |
அதுல் இண்டியா மூவீஸ் சார்பில் அதுல் எம்.போஸ்மியா தயாரிக்கும் படம் 'பிபி180' இதனை மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்குகிறார். இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன், டேனியல் பாலாஜி, தமிழ், அருள்தாஸ் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார், ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
படம் பற்றி இயக்குனர் ஜேபி கூறியதாவது: இயக்குனர் மிஷ்கினிடம் பல ஆண்டுகள் உதவியாளராக இருந்தேன். அவர் இயக்கிய படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தும் இருக்கிறேன். இப்போது இந்த படத்தின் மூலம் இயக்குராகி இருக்கிறேன். இது ஒரு மெடிக்கல் த்ரில்லர் படம். மீனவர் சங்கத் தலைவர் ஒருவருக்கும், அரசு மருத்துவமனை டாக்டருக்கும் நடக்கும் மோதல்தான் கதை. மீனவர் சங்கத் தலைவராக டேனியல் பாலாஜியும், அரசு டாக்டராக தான்யா ரவிச்சந்திரனும் நடிக்கிறார்கள். பிபி எனப்படும் ரத்த அழுத்தம் 180 தாண்டி விட்டால் மிகவும் ஆபத்தானது. அதனால்தான் படத்திற்கு பிபி 180 என்று தலைப்பு வைத்திருக்கிறேன். புதுச்சேரியில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.