வடிவேலுக்கு எதிராக வாய் திறக்கமாட்டேன் : கோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் | சூர்யா 45வது படத்தில் விஜய் சேதுபதி? | காளிதாஸ் ஜெயராமிற்கு முதல்வர் நேரில் வாழ்த்து | பரத் படத்தில் 20 நிமிட காட்சியை நீக்கியும் 'ஏ' சான்றிதழ்: தயாரிப்பாளர் புகார் | பிளாஷ்பேக்: இசை அமைப்பாளர் ரகுவரன் | ராகவா லாரன்ஸிற்கு வில்லனாகும் மாதவன் | கதாநாயகி ஆவேன் என கனவிலும் நினைக்கவில்லை - மீனாட்சி சவுத்ரி | பிளாஷ்பேக்: 7 சூப்பர் ஹிட் படங்கள், கைவிட்ட கணவன், 32 வயதில் மரணம்: வசந்த கோகிலத்தின் சோக வாழ்க்கை | ராமதாஸ் பேத்தி படத்தின் டீசரை வெளியிட்ட ரஜினி | 2024ல் டபுள் ரூ.1000 கோடி - அசத்திய தெலுங்கு சினிமா |
சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான நடிகர் சபீர். அதன் பிறகு திரிஷா நடித்துள்ள தி ரோட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. இதையடுத்து, விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் சபீர் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு பர்த்மார்க் என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நாயகியாக மிர்னா நடிக்கிறார். தற்போது இவர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பிஆர் வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்
படம் பற்றி இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறும்போது, 'பர்த்மார்க்' கதை ஒரு மிஸ்ட்ரி - டிராமாவாக இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதை. இதில், டேனியல் (அ) டேனியாக ஷபீர் கல்லாரக்கல் மற்றும் ஜெனிபராக மிர்னா நடிக்கிறார். இந்த கதை 90களில் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் சில மர்மங்கள் மற்றும் சஸ்பென்ஸ் உள்ளது. ஆனால், அதைவிட எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
குழந்தை பிறக்கும் செயல்முறை ஆண்கள் நினைப்பது போல் எளிதானது அல்ல. உடல்ரீதியான சவால்கள் தாண்டி மனரீதியாக பெண்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் குறித்தும் பேசப்பட வேண்டும். இது போன்றதொரு காலக்கட்டத்தில் தன் மனைவியுடன் கணவன் வரும்போது அவன் மீண்டும் பிறக்கிறான். மேலும், இது தன் தாய் மீதும் பெண்கள் மீதும் மரியாதையை அவனுக்கு ஏற்படுத்துகிறது" என்றார்.