கோலாகலமாய் நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் | மீண்டும் 'மயோசிடிஸ்' பிரச்னை: சிகிச்சை பெறும் சமந்தா | தமிழ் சினிமாவில் எதுவும் நடக்கவில்லை, கமிட்டியும் தேவையில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழா: இந்தியா முழுவதும் நடக்கிறது | 'லவ் அண்ட் வார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: 2 வருடங்களுக்கு பிறகு வெளிவருகிறது | சாரி: சேலையை மையமாக கொண்ட சைக்காலஜிக்கல் திரில்லர் படம் | இலங்கை தமிழர்கள் இணைந்து உருவாக்கிய 'ரத்தமாரே': ரஜினி வாழ்த்து | பிளாஷ்பேக்: 4 சகோதரர்கள் இணைந்து நடித்த படம் | நடன இயக்குனர் ஜானி மீது நடனப் பெண் புகார் | திருமண மோதிரம் 'மிஸ்ஸிங்' : மீண்டும் பிரிவு சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் |
நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கியவர் கோபி நயினார். இந்த படம் இவர்கள் இருவருக்கும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. ஆனால் அறம் படத்தின் இயக்குனர் இப்போது மோசடி புகாரில் சிக்கி உள்ளார். இலங்கையைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சியாமளா யோகராஜா என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோபி நயினார் மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் “நான் இலங்கையைச் சேர்ந்தவள். தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறேன். நடிகை நயன்தாரா நடித்துள்ள அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினார், புதிதாக நடிகர் ஜெய் நடிப்பில் 'கருப்பர் நகரம்' என்ற பெயரில் படம் எடுக்கப்போவதாக சொன்னார். எனக்கு தெரிந்த பட அதிபர் ஒருவரும் அதை உறுதி செய்தார். அந்த படத்தில் என்னையும் தயாரிப்பாளராக இணைத்து கொள்வதாகவும், படத்திற்கு கிடைக்கும் லாபத்தில் 25 சதவீதம் எனக்கு தருவதாகவும் சொன்னார்கள். அதை நம்பி சென்னை வந்த நான் 30 லட்சம் ரூபாயை முன்பணமாக கொடுத்தேன். புதிய படத்திற்கு பூஜை போட்டார்கள். அந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டேன்.
அதன்பிறகு பிரான்ஸ் போய் விட்டேன். ஆனால் திடீரென்று படத்தை நிறுத்தி விட்டதாக சொன்னார்கள். நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அதனால் என்னுடன் செல்போனில் பேசுவதை நிறுத்தி விட்டனர். எனவே எனக்கு தர வேண்டிய 30 லட்சத்தையும் மோசடி செய்து விட்டனர். அந்த பணத்தை சட்டப்படியான நடவடிக்கை எடுத்து வசூல் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்”என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.