குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
தமிழில் அதிதி மேனன் என்ற பெயரில் பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை, படங்களில் நடித்தவர் மிர்னா மேனன். தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் போகவே தனது இயற்பெயரில் மலையாள படங்களில் நடித்தார். 'பிக் பிரதர்' படத்தில் மோகன்லால் உடன் நடித்ததன் மூலம் அங்கு பிசியானர். பின்னர் 'கிரேஸி பெலோவ்' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமனார். ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் வந்தார். ஓடிடி தளத்தில் வெளியான 'புர்கா' படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் 'பெர்த் மார்க்' என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்தை விக்ரமன் ஸ்ரீதரன் தனது நண்பர் ஸ்ரீராம் சிவராமனுடன் இணைந்து தயாரித்து, இயக்குகிறார். மிர்னாவுடன் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி உள்பட பலர் நடிக்கிறார்கள். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்கிறார், விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் கூறியதாவது : ஜெனி என்ற மிர்னா கதாபாத்திரத்தைச் சுற்றி நகரக்கூடிய கதை. படத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக மிர்னா நடித்துள்ளார். படப்பிடிப்பு 36 நாட்கள் நடந்துள்ளது. ஜெனி என்ற கதாபாத்திரத்திற்கு நன்றாகத் தெரிந்த, திறமையாக நடிக்கக்கூடிய ஒரு நடிகையைத் தான் தேடிக் கொண்டிருந்தோம். அதில் மிகச் சரியாக மிர்னா பொருந்தினார். கடுமையாக உழைக்கக்கூடியவர். என்னக் காட்சி எடுக்கப் போகிறோம் என்பது குறித்து அவர் எப்போதும் தெளிவாக இருப்பார். ஜெனிக்கு அவரைத் தவிர வேறு யாரும் பொருந்தி இருப்பார்களா என்பது சந்தேகம்தான். இதுவரை பார்க்காத மிர்னாவை நிச்சயம் 'பெர்த் மார்க்' படத்தில் பார்க்கலாம். என்றார்.