'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினி, 7 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். அவரது தங்கையாக ஜீவிதா நடிக்கும் இந்த படத்திற்கு ஏ .ஆர். ரகுமான் இசையமைக்கிறார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் ஐஸ்வர்யா ரஜினி ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், உங்களை பார்த்து வளர்ந்தேன். ஆனபோதிலும் உங்களை வைத்து படம் இயக்குவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. உங்களுடன் இணைந்து இந்த உலகை பார்க்கிறேன். நீங்கள் தான் நான் என்பதை உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் உங்களை அதிகமாக நேசிக்கிறேன் அப்பா என நெகிழ்ச்சி உடன் தெரிவித்து இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி.
இந்த லால் சலாம் படத்தில் ரஜினி நடிக்கும் மொய்தீன்பாய் கேரக்டர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை இடம் பெறுவதாகவும், ரஜினிக்கு இப்படத்தில் இரண்டு சண்டை காட்சிகள் இருப்பதாகவும் அப்பட வட்டாரத்தில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.