மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப்அலிகான் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'. ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் ஜுன் 16ம் தேதி வெளியாகிறது. இன்று ஜுன் 6ம் தேதி இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற உள்ளது. அங்குள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா யுனிவர்சிட்டி மைதானத்தில் விழா நடக்க இருக்கிறது. சுமார் ஒரு லட்சம் பேர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவுக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளார்களாம். இசை, நடன நிகழ்வுகளும் நடக்க இருப்பதாகத் தெரிகிறது. மேலும், மைதானத்தில் பிரபாஸின் 50 அடி உயர ஹாலோகிராபிக் உருவத்தையும் உருவாக்க உள்ளார்களாம். தலைமை அழைப்பாளராக ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமி கலந்து கொள்கிறார்.
திருப்பதியைத் தொடர்ந்து மற்ற இந்தியாவின் மற்ற முக்கிய மாநகரங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ராமாயணத்தைத் தழுவி மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் வியாபாரம் மிகப் பெரும் அளவில் நடைபெற்றுள்ளது. 'பாகுபலி 2' படத்தின் வசூலை இந்தப் படம் மூலம் பிரபாஸ் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.