விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தி கேரளா ஸ்டோரி என்கிற படம் வெளியாகி இந்தியா முழுவதிலும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியது. இந்த படத்திற்கு சில இடங்களில் எதிர்ப்பு எழுந்தாலும் திரையிட தடை விதிக்கப்பட்டாலும், அதையெல்லாம் தாண்டி கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய லாபம் ஈட்டி உள்ளது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த அதா ஷர்மா என்பவருக்கும் மிகப்பெரிய புகழ் வெளிச்சத்தை பெற்றுத் தந்துள்ளது.
இதை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வரும் அதா ஷர்மா சோசியல் மீடியாவிலும் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடி வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “கேரள ஸ்டோரி படம் வருவதற்கு முன் பலரும் எனது மூக்கை அறுவை சிகிச்சை செய்து மாற்றிக் கொள்ளும்படி அட்வைஸ் செய்து வந்தனர். ஆனால் கேரளா ஸ்டோரி படம் வெளியான பிறகு பலரும் எனது மூக்கு நன்றாக இருக்கின்றது என்று பாராட்டி வருகின்றனர். அதனால் எனக்கு இப்போது அப்படி அறுவை சிகிச்சை செய்வதற்கான தேவையும் இல்லை.. நேரமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் அவரது முன்னாள் பாய் பிரண்டுகள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறும்போது, “அவர்கள் யாரும் என்னை அழைக்க மாட்டார்கள். நான்தான் அவர்களை அழைப்பேன். அப்படி அவர்களை அழைத்து பேசுவதற்கு ஆல்கஹால் அருந்தி இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. எனக்கு ஒரு ஸ்பூன் இருமல் டானிக்கே போதும் அவர்களை அழைப்பதற்கு” என்று கூறியுள்ளார்.