கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
புகழ்மணி இயக்கத்தில் யோகி பாபு, ராம் சுந்தர், பிரியங்கா நடிப்பில் உருவாகும் படம் ‛காவி ஆவி நடுவுல தேவி'. இப்படத்தின் மூலம் ராம் சுந்தர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடிக்கிறார்கள். மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கிறார். இதன் கதை, திரைக்கதையை வி.சி.குகநாதன் எழுதியுள்ளார். இதில் யோகி பாபு 14 வேடங்களில் நடித்திருக்கிறார். அவரைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிரைலரை ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டார். ரஜினியின் வீட்டில் நடந்த இந்த நிகழ்வில் வி.சி.குகநாதன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர். வி.சி.குகநாதன் ரஜினி நடித்த மாங்குடி மைனர், தனிக்காட்டு ராஜா படங்களை இயக்கியவர். அந்த நட்பின் அடிப்படையில் ரஜினி இந்த படத்தின் டீசரை வெளியிட்டுக் கொடுத்துள்ளார்.