ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள படம் ‛டக்கர்'. திவ்யன்ஷா நாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் யோகி பாபு, அபிமன்யூ சிங், முனீஷ்காந்த், விக்னேஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் வருகிற 9ம் தேதி வெளியாகிறது. இதை முன்னிட்டு நடந்த பத்திரிகையாளர் சங்திப்பில் சித்தார்த் பேசியதாவது:
கோவிட் காலத்துக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். 'டக்கர்' பட இயக்குநர் கார்த்திக் இந்தப் படத்திற்காக என்னை சந்தித்தபோது, சில விஷயங்கள் எனக்கு ஹைலைட்டாக தோன்றியது. எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான ஒரு படம் இது. டக்கர் என்பதற்கு பல அர்த்தம் உண்டு. இந்தப் படத்தில் 'டக்கர்' பயன்படுத்தியதன் காரணம், மோதல். ஒரு பொண்ணுக்கும் ஹீரோவுக்குமான மோதல் தான் அது.
உங்களை இதுவரை சாப்ட்டாகதான் பார்த்திருப்பார்கள். இதில் ரக்கட்டாக பார்த்தால் வித்தியாசமாக இருக்கும் என இயக்குநர் சொன்னார். அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் இந்தப் படத்தை எடுத்தோம். இந்தப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்தான். ஜூன் 9 அன்று இந்தப் படம் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு இதன் மீது நம்பிக்கை உள்ளது. எந்த அளவுக்கு நம்பிக்கை என்றால், கார்த்தியுடன் அடுத்தடுத்து படங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். தமிழ் சினிமாவில் அவர் முக்கியமான கமர்ஷியல் இயக்குநராக இருப்பார்.
ஆகஸ்ட் மாதம் வந்தால் 'பாய்ஸ்' படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது. இந்த 20 வருடத்தில் நிறைய நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்த 20 வருடங்களுக்கான திட்டமிடலுடன் இருக்கிறேன். வருகிற இரண்டு வருடங்களில் நல்ல படங்களில் கமிட் ஆகியுள்ளேன்.
இப்போது அதிகம் கருத்து சொல்வது இல்லையே ஏன் என்று கேட்கிறார்கள். தவறை தட்டிக் கேட்கும் பரம்பரையில் வந்தவன். அதனால் எனக்கு தவறு என்று படும் விஷயங்கள் பற்றி பேசி வந்தேன். இப்போது நான் நடிப்பில் அதிக கவனம் செலுத்துகிறேன். காரணம் பிற்காலத்தில் என் படங்கள் பேசப்பட வேண்டும், ரசிகனுக்கும், எனக்குமான இடைவெளி குறைய வேண்டும். பொன்னியின் செல்வன் படத்தின் கதை விவாதத்தில் நான் இருந்தேன். எனக்கேற்ற கேரக்டர் அந்த கதையில் இருந்தால் மணிரத்னம் சார் என்னை நடிக்க வைத்திருப்பார். அதனால் பொன்னியின் செல்வனில் நடிக்காதது வருத்தம் இல்லை. மணிரத்னம் சாரின் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி. என்றார்.