தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் நாசர். இவரது சகோதரர் ஜவஹர். 1990 காலகட்டத்தில் ஒளிப்பதிவாளர் அப்துல் ரெஹ்மானிடம் இதயம், கிழக்கு வாசல் போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக இவர் பணியாற்றியுள்ளார். இதையடுத்து வெளிநாட்டில் சொந்தமாக பிஸ்னஸ் செய்து வந்தார். பின்னர் சென்னை திரும்பிய இவர் கடந்த சில ஆண்டுளாக படத்தில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடி அலைந்துள்ளார். ஜி.வி 2, பனிவிழும் மலர்வனம் போன்ற படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்தார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்; "நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் என்னை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க லோகேஷ் கனகராஜ் வாய்ப்பளித்துள்ளார். நான் நடித்த கதாபாத்திரத்தை குறித்து தற்போது சொல்ல முடியாது. இந்த படத்துக்காக காஷ்மீரில் 40 நாட்கள் தங்கி 15 நாட்கள் என் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது".
இவ்வாறு ஜவஹர் தெரிவித்துள்ளார்.