லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
இயக்குனர் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது கிரிக்கெட் கதை களத்தை மையமாக கொண்ட லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதை தொடர்ந்து மற்றொரு கிரிக்கெட் சம்மந்தமான படத்தை இயக்குகிறார் என்று தகவல் பரவி வருகிறது.
அந்த தகவல்கள் படி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குகிறார் என்று கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு அவரது வாழ்க்கை பயணத்தை பயோபிக் திரைப்படமாக உருவாக்க இருப்பதாக கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால், அடுத்தகட்ட பணிக்கு நகரவில்லை.
இந்த நிலையில், இப்போது கங்குலியின் பயோபிக் படத்தை ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்கிறார் என கூறப்படுகிறது. கங்குலி வேடத்தில் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.