அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
நடிகர் ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணா. ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினியை விட அதிகம் பேசி வந்தவர் இவர். ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த பிறகு அரசியல் வேண்டாம் என்று தடுத்தவரும் இவர்தான். இதை தொடர்ந்து ரஜினி மருத்துவர்களின் ஆலோசனைப்படியும், நலம் விரும்பிகளின் வேண்டுகோள்படியும் நான் அரசியலுக்கு வரவில்லை என்று முறைப்படி அறிவித்து விட்டார்.
என்றாலும் ரஜினி மனம் மாறி என்றாவது மீண்டும் அரசியலுக்கு வரலாம் என்று அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ரஜினி இனி அரசியலுக்கு வந்தாலும் பலன் இல்லை என்று அவரது அண்ணன் சத்ய நாராயணன் கூறியிருக்கிறார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த அவர் வழிபாடு முடிந்து திரும்பியதும் நிருபர்களிடையே பேசினார். அப்போது ரஜினி அரசியலுக்கு வரும் வாய்ப்பு குறித்து கேட்டபோது “ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. கடவுளின் அருளால் அவர் நீண்ட காலம் நலமாக இருக்க வேண்டும். ரஜினி இனி அரசியலுக்கு வரமாட்டார். அவருக்கு வயதாகிவிட்டது. அவர் இனி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை. யாருக்கும் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பில்லை" என்றார்.